Advertisement

காஷ்யப், சவுரப் வர்மா வெற்றி

அல்மேர்: நெதர்லாந்து ஓபன் பாட்மின்டன் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்களான காஷ்யப், சவுரப் வர்மா வெற்றி பெற்றனர்.

நெதர்லாந்தில், சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் காஷ்யப், டென்மார்க்கின் விக்டர் ஸ்வென்சன் மோதினர். மொத்தம் 51 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய காஷ்யப் 25-23, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் சவுரப் வர்மா, இலங்கையின் நிலுகா கருணாரத்னே மோதினர். மொத்தம் 38 நிமிடம் நீடித்த போட்டியில் சவுரப் வர்மா 21-9, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement