Advertisement

ஆசிய பாரா: மாரியப்பன் வெண்கலம்

ஜகார்த்தா: ஆசிய பாரா விளையாட்டில் தமிழகத்தின் உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் வெண்கலம் வென்றார். இந்தியாவின் ஷரத் தங்கம் கைப்பற்றினார்.

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டு நடக்கிறது. இதன் உயரம் தாண்டுதல் (டி 42/63 பிரிவு) போட்டியில் இந்திய வீரர் ஷரத் குமார் 1.90 மீ., தாண்டி தங்கத்தை தட்டிச்சென்றார். முன்னாள் 'நம்பர்-1' வீரரான பீகாரைச் சேர்ந்த இவர், கடந்த 2014, இன்ச்சான் மற்றும் தற்போது என தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் கைப்பற்றியுள்ளார்.

1.82 மீ., தாண்டிய மற்றொரு இந்திய வீரர் வருண் வெள்ளி வென்றார். கடந்த ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த மாரியப்பன், இம்முறை 1.67 மீ., மட்டும் உயரம் தாண்டி மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார்.

சுந்தர் வெள்ளி

ஈட்டி எறிதலில் (எப் 46 பிரிவு) இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் பங்கேற்றார். துடிப்பாக செயல்பட்ட இவர் அதிகபட்சமாக ஐந்தாவது வாய்ப்பில் 61.33 மீ., துாரம் எறிந்து இரண்டாவது இடத்துடன் வெள்ளி வென்றார். 60.92 மீ., துாரம் எறிந்த சக வீரர் ரின்கு வெண்கலம் கைப்பற்றினார். இரண்டு முறை பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் தேவேந்திரா ஜஹாரியா நான்காவது இடம் மட்டுமே பிடித்தார்.

ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் (டி 13 பிரிவு) 52 வினாடியில் இலக்கை கடந்த இந்தியாவின் அவ்னில் குமார் வெண்கலம் கைப்பற்றினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement