Advertisement

தமிழ் தலைவாஸ் 3வது தோல்வி

சென்னை: புரோ கபடி லீக்தொடரில் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்தது. லீக் போட்டியில் 37-48 என, பெங்களூரு அணியிடம் வீழ்ந்தது.

புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் நடக்கிறது. நேற்று, சென்னையில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில்தமிழ் தலைவாஸ், பெங்களூரு அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஏமாற்றிய தமிழ் தலைவாஸ் அணி, முதல் பாதி முடிவில் 12-27 என பின்தங்கி இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட தமிழ் தலைவாஸ் அணி 25 புள்ளி பெற்ற போதிலும் வெற்றிக்கு போதவில்லை.

ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 37-48 என்ற புள்ளி கணக்கில் தொடர்ந்து 3வது தோல்வியை பதிவு செய்தது. முதல் போட்டியில் பாட்னாவை வென்ற தமிழ் தலைவாஸ், அதன்பின் உ.பி., மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளிடம் வீழ்ந்தது. அஜய் தாகூர் (தமிழ் தலைவாஸ்), பவான் (பெங்களூரு) தலா 20 புள்ளிகள் பெற்றனர்.

மற்றொரு லீக் போட்டியில் மும்பை அணி 39-32 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement