Advertisement

ஹாக்கி: பைனலில் இளம் இந்தியா

ஜோகர் பக்ரு: மலேசியாவில் உள்ள ஜோகர் பக்ரு நகரில் 21 வயதுக்குட்பட்டோருக்கான சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. முதல் மூன்று போட்டியில் மலேசியா, நியூசிலாந்து, ஜப்பான் அணிகளை தோற்கடித்த இந்திய அணி, 4வது போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு குர்சாகிப்ஜித் சிங் (5வது நிமிடம்), ஹாஸ்பிரீத் சிங் (11வது), கேப்டன் மன்தீப் மோர் (14வது), விஷ்ணுகாந்த் சிங் (௧௫வது) தலா ஒரு கோல் அடித்தனர். 18வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பில் டாமன் ஸ்டீபென்ஸ் ஒரு கோலடித்தார். முதல் பாதி முடிவில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய ஆஸ்திரேலியாவின் டாமன் ஸ்டீபென்ஸ்(௩௫, ௫௯, ௬௦வது நிமிடம்) ௩ கோல் அடித்தார். ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் இந்திய வீரர் லக்ரா தன்பங்கிற்கு ஒரு கோலடித்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5-4 என தொடர்ந்து 4வது வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் 12 புள்ளிகளுடன் பைனலுக்கான இடத்தை உறுதி செய்தது.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • kannaiya srinivasan - Muscat,ஓமன்


    முயற்சி செய்தல் வானமும் வையகமும் கையகம் ஆகும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement