Advertisement

அபாஸ் அபாரம்: ஆஸி., பரிதாபம்

துபாய்: முதல் டெஸ்டில் பாகிஸ்தான் பவுலர்கள் பிடியில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் துபாயில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 482, ஆஸ்திரேலியா 202 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 45 ரன் எடுத்திருந்தது. இமாம் (23) அவுட்டாகாமல் இருந்தார்.

இமாம் நம்பிக்கை

நேற்று, 4ம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணிக்கு இமாம் (48) நம்பிக்கை தந்தார். ஹாரிஸ் சோகைல் (39), ஆசாத் ஷபிக் (41) கைகொடுக்க, 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. பாபர் ஆசம் (28) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஜான் ஹாலந்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

அபாஸ் அசத்தல்

பின், 462 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா நல்ல துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்த போது முகமது அபாஸ் பந்தில் பின்ச் (49) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார். தொடர்ந்து அசத்திய அபாஸ் 'வேகத்தில்' ஷான் மார்ஷ், மிட்சல் மார்ஷ் 'டக்-அவுட்' ஆகினர். பொறுப்பாக ஆடிய கவாஜா அரைசதமடித்தார்.

நான்காம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்து, 326 ரன்கள் பின்தங்கி உள்ளது. கவாஜா (50), டிராவிஸ் ஹெட் (34) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் முகமது அபாஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இன்றைய கடைசி நாளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடித்தால் மட்டுமே தோல்வியின் பிடியிலிருந்து தப்ப முடியும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement