Advertisement

இதயங்களை வென்ற இருவர்

லண்டன்: ஓவல் டெஸ்டில் துணிச்சலாக விளையாடி சதம் அடித்த லோகேஷ் ராகுல், ரிஷாப் பன்ட் ரசிகர்களின் இதயங்களை வென்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இருப்பினும் கடைசி நாளில் துவக்க வீரர் லோகேஷ் ராகுல் எவ்வித பதட்டமும் இல்லாமல் விளையாடி சதம் அடித்தார்.

கடந்த 2000, சிட்னி டெஸ்டில் இப்படித்தான் துவக்க வீரர் லட்சுமண் (167), 2வது இன்னிங்சில் சதம் அடித்தார். இது, அணியில் இவருக்கு நிரந்தர இடம் கிடைக்க உதவியது. ராகுலை பொறுத்தவரை தற்போதைய தொடரின் 4 டெஸ்டில் (சராசரி 14.12 ரன்) ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

கடைசியாக ஓவலில் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட இவர், அன்னிய மண்ணில் 32 இன்னிங்சிற்கு பிறகு அரைசதம் அடித்த முதல் துவக்க வீரர் ஆனார். பின் இதை சதமாக மாற்றினார்.

சபாஷ் ரிஷாப்: மறுபக்கம் ரிஷாப் பன்ட், சிக்சர் அடித்து ரன் கணக்கைத் துவக்கினார். கடைசியில் சிக்சர் அடித்து முதல் சதம் எட்டினார். டெஸ்ட் அரங்கில் இதுபோல சாதித்த முதல் வீரரான இவர், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement