Advertisement

இந்தியா 'நம்பர்–1': டெஸ்ட் தரவரிசையில் நீடிப்பு

லண்டன்: ஐ.சி.சி., டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததால் 10 புள்ளியை பறிகொடுத்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை ('ரேங்க்') பட்டியல் வெளியிடப்பட்டது. சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 1-4 என கோஹ்லி தலைமையிலான இந்திய அணி பறிகொடுத்தபோதும், 'நம்பர்-1' (115 புள்ளி) இடத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், 10 புள்ளிகளை இழந்துள்ளது. இத்தொடரை 5வது இடத்துடன் (97 புள்ளி) துவக்கிய ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி, தொடரை வென்றதால் நான்காவது (105) இடத்திற்கு முன்னேறி உள்ளது. தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் (106) தசம புள்ளி வித்தியாசத்தில் இரண்டாவது, மூன்றாவது இடங்களை வகிக்கின்றன. நியூசிலாந்து அணி (102) ஒரு இடம் பின்தங்கி ஐந்தாவது இடம் அடைந்தது.



ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில் 'டாப்-10' இடங்களை பிடித்த அணிகள்:



'ரேங்க்' அணி புள்ளி 1 இந்தியா 115 2 தென் ஆப்ரிக்கா 106 3 ஆஸ்திரேலியா 106 4 இங்கிலாந்து 105 5 நியூசிலாந்து 102 6 இலங்கை 97 7 பாகிஸ்தான் 88 8 வெஸ்ட் இண்டீஸ் 77 9 வங்கதேசம் 67 10 ஜிம்பாப்வே 2 கோஹ்லி 'டாப்'

வீரர்களுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் கோஹ்லி முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரை துவக்கியபோது, 902 புள்ளி எடுத்திருந்த இவர், தற்போது 930 புள்ளி பெற்றுள்ளார். ஓவல் டெஸ்டில் சதம் கடந்த இந்தியாவின் லோகேஷ் ராகுல் (19வது இடம்) 16 இடம் முன்னேறி உள்ளார்.

பவுலிங்கில் இங்கிலாந்தின் ஆண்டர்சன், தென் ஆப்ரிக்காவின் ரபாடா, பிலாண்டர் முதல் மூன்று இடங்களில் நீடிக்கின்றனர். 'ஆல் ரவுண்டர்' பட்டியலில் இந்தியாவின் ஜடேஜா ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தை அடைந்தார். முதலிடத்தில் வங்கதேசத்தின் சாகிப் நீடிக்கிறார்.

'டாப்-6' டெஸ்ட் பேட்ஸ்மேன்:

'ரேங்க்' வீரர்/அணி புள்ளி 1 கோஹ்லி (இந்தியா) 930 2 ஸ்மித் (ஆஸி.,) 929 3 வில்லியம்சன் (நியூசி.,) 847 4 ஜோ ரூட் (இங்கிலாந்து) 835 5 வார்னர் (ஆஸி.,) 820 6 புஜாரா (இந்தியா) 772 'டாப்-4' டெஸ்ட் பவுலர்:

'ரேங்க்' வீரர்/அணி புள்ளி 1 ஆண்டர்சன் (இங்கிலாந்து) 899 2 ரபாடா (தென் ஆப்ரிக்கா) 882 3 பிலாண்டர் (தென் ஆப்ரிக்கா) 826 4 ஜடேஜா (இந்தியா) 814 'டாப்-5'' டெஸ்ட் 'ஆல்-ரவுண்டர்':

'ரேங்க்' வீரர்/அணி புள்ளி 1 சாகிப் (வங்கதேசம்) 420 2 ஜடேஜா (இந்தியா) 383 3 பிலாண்டர் (தென் ஆப்ரிக்கா) 370 4 ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) 355 5 அஷ்வின் (இந்தியா) 343

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Sathish - Coimbatore,இந்தியா


    அந்நிய மண்ணில் அதிக போட்டிகள் விளையாடி இருந்தால் இந்த இடம் கிடைத்திருக்காது சந்தேகமில்லாமல்.

  • kannaiya srinivasan - Muscat,ஓமன்


    இனி தோற்றால் தாங்காது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement