Advertisement

செய்னா, ஸ்ரீகாந்த் பின்னடைவு

புதுடில்லி: உலக பாட்மின்டன் தரவரிசையில் இந்தியாவின் செய்னா (11வது இடம்), ஸ்ரீகாந்த் (8வது) பின்னடைவை சந்தித்தனர்.

சர்வதேச பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 6வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இவர் சமீபத்தில் முடிந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் 3வது சுற்றோடு திரும்பினார். மற்றொரு இந்திய வீரர் பிரனாய், 11வது இடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் சமீர் வர்மா (21வது இடம்), சாய் பிரனீத் (24வது) 'டாப்-25' பட்டியலில் உள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சிந்து 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர், சமீபத்தில் முடிந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இத்தொடரில் காலிறுதி வரை சென்ற மற்றொரு இந்திய வீராங்கனை செய்னா நேவல், 10வது இடத்தில் இருந்து 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement