Advertisement

கோர்ட் உத்தரவு: பி.சி.சி.ஐ., நிம்மதி

புதுடில்லி: கடந்த 2013, ஐ.பி.எல்., சூதாட்ட சர்ச்சை இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) பெரும் சிக்கலை கொண்டு வந்தது. இதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து லோதா குழு பல்வேறு பரிந்துரைகள் அளித்தது.

'ஒரு மாநிலத்திற்கு ஒரு ஓட்டு, நிர்வாகிகள் பதவிக்காலம்,' குறித்த விதிகள் பி.சி.சி.ஐ.,க்கு சிக்கலை தந்தது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பி.சி.சி.ஐ., சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கன்வில்கர், சந்திராசூட் வழங்கிய உத்தரவில்,' ஒரு மாநிலத்திற்கு ஒரு ஓட்டு விதி ரத்து செய்யப்படுகிறது.

மும்பை, சவுராஷ்டிரா, விதர்பா உள்ளிட்ட மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு முழு அந்தஸ்து வழங்கப்படுகிறது. தவிர பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் தொடர்ந்து இரண்டு முறை பதவி வகிக்கலாம். இதை அடுத்த 30 நாட்களுக்குள் அனைத்து மாநில சங்கங்களும் அமல்படுத்த வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனால் பி.சி.சி.ஐ., தற்காலிக செயலர் அமிதாப் சவுத்ரி, பொருளாளர் அனிருத் மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம் என்பதால் நிர்வாகிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement