Advertisement

காலிறுதியில் சிந்து

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார்.

பாங்காக்கில், தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, ஹாங்காங்கின் இப் புய் இன் மோதினர். மொத்தம் 37 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய சிந்து 21-16, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் காஷ்யப் 18-21, 21-18, 19-21 என, ஜப்பானின் கன்டா டிசுனேயமாவிடம் தோல்வியடைந்து வெளியேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனாய் 18-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியாவின் சோனி டிவி கன்கோரோவிடம் வீழ்ந்தார்.

கலப்பு இரட்டையர் 2வது சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சத்விக்சாய்ராஜ் ஜோடி 11-21, 16-21 என, ஜப்பானின் டகேஷி கமுரா, கெய்கோ சோனோடா ஜோடியிடம் வீழ்ந்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சுமீத் ரெட்டி, மானு அட்ரி ஜோடி 24-22, 13-21, 19-21 என, ஜப்பானின் ஹிரோயுகி என்டோ, யுடா வடானபே ஜோடியிடம் தோல்வியடைந்து ஏமாற்றியது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement