Advertisement

உருகுவே, இங்கிலாந்துக்கு அபராதம்

மாஸ்கோ: உலக கோப்பை கால்பந்து தொடரில் ஊடகம் மற்றும் 'மார்க்கெட்டிங்' விதிமுறைகளை மீறிய இங்கிலாந்து, உருகுவே அணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில், உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகள், 'பிபா' அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களின் விளம்பர லோகோவை மட்டுமே தங்களது 'ஜெர்சி' மற்றும் விளையாட்டு உபகரணங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால் சுவீடனுக்கு எதிரான காலிறுதியில் இங்கிலாந்து அணியினர் நிறைய பேர் தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்களின் லோகோவை பயன்படுத்தி இருந்தனர். இதேபோல உருகுவே அணியினரும் 'பிபா' அமைப்புடன் ஒப்பந்தம் செய்யாத நிறுவனங்களில் லோகோவை உபயோகப்படுத்தி உள்ளனர். தவிர உருகுவே அணியினர் ஒரு போட்டிக்கு தாமதமாக வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து ஊடகம் மற்றும் 'மார்க்கெட்டிங்' விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 'பிபா' சார்பில் இங்கிலாந்து, உருகுவே அணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி இங்கிலாந்துக்கு ரூ. 48 லட்சமும், உருகுவே அணிக்கு ரூ. 34 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement