Advertisement

பைனலில் செரினா – கெர்பர்

லண்டன்: லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-10' ஜெர்மனியின் கெர்பர், 12வது இடத்தில் உள்ள லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ மோதினர்.

ஒரு மணி நேரம், 7 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய கெர்பர் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று விம்பிள்டனில் 2வது முறையாக பைனலுக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜூலியா ஜார்ஜசை (ஆஸி.,), 6--2, 6--4 என வீழ்த்தி, 10வது முறையாக பைனலுக்கு முன்னேறினார். இதில் கெர்பரை சந்திக்கிறார். ஏற்கனவே 2016ல் கெர்பரை வீழ்த்திய செரினா கோப்பை வென்றுள்ளார்.

நடால்-ஜோகோவிச் மோதல்

இன்று நடக்கவுள்ள ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-1' வீரர், ஸ்பெயினின் ரபெல் நடால், 21வது இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மோதுகின்றனர். ஏ.டி.பி., அரங்கில் இவர்கள் இருவரும் 51 முறை மோதியுள்ளனர். இதில் ஜோகோவிச் 26, நடால் 25ல் வெற்றி பெற்றனர்.

விம்பிள்டன் அரங்கில் இரண்டு முறை மோதியுள்ள இவர்கள், தலா ஒரு வெற்றியை பெற்றனர். கடந்த 2007ல் நடந்த விம்பிள்டன் அரையிறுதியில் ஜோகோவிச் காயத்தால் விலகியதால் நடால் பைனலுக்கு முன்னேறினார். கடந்த 2011 பைனலில் ஜோகோவிச், நடாலை தோற்கடித்தார். விம்பிள்டனில் ஜோகோவிச் 3 (2011, 2014, 2015), நடால் 2 (2008, 2010) முறை கோப்பை வென்றுள்ளனர்.

இன்று நடக்கவுள்ள மற்றொரு அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், அமெரிக்காவின் ஜான் இஸ்னர் மோதுகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement