Advertisement

சிந்து, பிரனாய் வெற்றி

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, பிரனாய் வெற்றி பெற்றனர்.

பாங்காக்கில், தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து 21-8, 21-15 என்ற நேர் செட் கணக்கில் பல்கேரியாவின் லிண்டா ஜெட்சிறியை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி 13-21, 17-21 என, ஜப்பானின் சயாகா சடோவிடம் வீழ்ந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் காஷ்யப் 21-15, 21-17 என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் ஜேசன் அந்தோனியை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனாய் 21-16, 21-19 என, ஸ்பெயினின் பாப்லோ அபியனை தோற்கடித்தார்.

இந்தியாவின் சமீர் வர்மா 18-21, 16-21 என, தாய்லாந்தின் டனாங்சக்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement