Advertisement

இங்கிலாந்து மீண்டும் வெற்றி

கார்டிப்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி, 38 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி கார்டிப் நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி, 'பீல்டிங்' தேர்வு செய்தது.

ராய் சதம்

முதலில் 'பேட்' செய்த இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோவ் (42) நல்ல துவக்கம் தந்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் (26), ஜோ ரூட் (22) நிலைக்கவில்லை. மழையால் போட்டி 2 முறை தடைபட்டது. பின் அபாரமாக ஆடிய ஜேசன் ராய் (120) சதம் கடந்தார். பில்லிங்ஸ் (11), மொயீன் அலி (8), வில்லே (11) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய பட்லர், அரைசதம் கடந்து கைகொடுத்தார். இங்கிலாந்து அணி, 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 342 ரன்கள் எடுத்தது. பட்லர் (91) அவுட்டாகாமல் இருந்தனர்.

மார்ஷ் அபாரம்

சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் (19), ஷார்ட் (21) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. ஸ்டாய்னிஸ் (9), ஆரேன் பின்ச் (0) ஏமாற்றினர். மேக்ஸ்வெல் (31), ஆஷ்டன் ஏகார் (46) ஓரளவு கைகொடுத்தனர். கேப்டன் டிம் பெய்னே (15), ஆன்ட்ரூ டை (10) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய ஷான் மார்ஷ் (131) சதம் கடந்து நம்பிக்கை தந்தார். ஆஸ்திரேலிய அணி, 47.1 ஓவரில், 304 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி, 2-0 என முன்னிலை பெற்றது. மூன்றாவது போட்டி வரும் 19ல் நாட்டிங்காமில் நடக்க உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • s t rajan - chennai,இந்தியா


    சபாஷ் மார்ஷ்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement