Advertisement

பாக்., திணறல் வெற்றி

டப்ளின்: டெஸ்ட் அரங்கில் முதல் போட்டியில் களமிறங்கிய அயர்லாந்து அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது.

அயர்லாந்து அணி, கடந்த ஆண்டு, சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றது. இதையடுத்து, சொந்தமண்ணில் முதல் டெஸ்டில், பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கியது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 310/9 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது.

அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 130 ரன்னுக்கு சுருண்டு, 'பாலோ ஆன்' பெற்றது. நான்காவது நாள் முடிவில், அயர்லாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் 319/7 ரன்கள் எடுத்திருந்தது. ஓ பிரையன் (118), கனே (8) அவுட்டாகாமல் இருந்தனர். ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த அயர்லாந்து அணி, 339 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இரண்டாவது இன்னிங்சில் 160 ரன் எடுத்தால் வெற்றி என, களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, மர்டாக் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' அசார் அலி (2), ஆசாத் சபிக் (1) சிக்கினர். ஹாரிஸ் சோகைல் (7) ஏமாற்றி, 14 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

பின், இமாம் அல் ஹக், பாபர் ஆசம் (59) இணைந்து அணியை மீட்டனர். கேப்டன் சர்பராஸ் (8) ஏமாற்றிய போதும், பாகிஸ்தான் அணி, 5 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. முதல் அரைசதம் அடித்த இமாம் அல் ஹக் (74), சதாப் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement