Advertisement

மார்க் வாக் விலகல்

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து மார்க் வாக் விலகினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் மார்க் வாக், 52. கடந்த 2014 முதல் ஆஸ்திரேலிய அணி தேர்வுக்குழு உறுப்பினராக உள்ளார். இவரது 4 ஆண்டு கால ஒப்பந்தம் வரும் ஆகஸ்ட் 31ல் முடிகிறது. இதற்கிடையே, தனியார் 'டிவி சேனல்' ஒன்றில் வர்ணணையாளராக இணைய உள்ளார். இதனால், ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரும்பவில்லை. இப்பணியிலிருந்து விலகினாலும், எதிர் வரும் இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே தொடர் வரை பணியில் நீடிப்பார்.

இது குறித்து மார்க் வாக் கூறுகையில்,'' கடந்த 4 ஆண்டாக சக தேர்வுக்குழு உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள், வீரர்களுடன் இணைந்து செயல்பட்டேன். இந்த காலகட்டத்தில், ஆஸ்திரேலிய அணி மூன்றுவித போட்டியிலும் உச்சம் தொட்டதை எண்ணி பெருமைப்படுகிறேன். எதிர் வரும் நாட்களிலும், சாதனை படைப்பதை பார்க்க காத்திருக்கிறேன்,'' என்றார்.



Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement