Advertisement

யூகி பாம்ப்ரி முன்னேற்றம்

புதுடில்லி: ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி, முதன்முறையாக 83வது இடத்துக்கு முன்னேறினார்.

டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. இதில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, 105வது இடத்தில் இருந்து, முதன்முறையாக 83வது இடம் பிடித்தார். இவர், சமீபத்தில் முடிந்த சீனதைபே சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார். இதன்மூலம், பிப். 2016க்கு பின், தரவரிசையில் 'டாப்-100' பட்டியலில் இடம் பிடித்தார். கடந்த ஜூலை 2011ல், சோம்தேவ் தேவ்வர்மன், 62வது இடம் பிடித்திருந்தது இந்திய வீரர் ஒருவரின் சிறந்த தரவரிசையாக உள்ளது.

சீனதைபே சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பைனல் வரை சென்ற மற்றொரு இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், 17 இடங்கள் முன்னேறி, முதன்முறையாக 116வது இடம் பிடித்தார்.

இரட்டையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் திவிஜ் சரண், 41வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் லியாண்டர் பயஸ், 49வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ரோகன் போபண்ணா, 19வது இடத்தில் நீடிக்கிறார்.

பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., இரட்டையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்சா, 24வது இடத்தில் தொடர்கிறார். ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, முதன்முறையாக 194வது இடம் பிடித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement