Advertisement

வண்ணமயமான நிறைவு விழா

காமன்வெல்த் விளையாட்டின் நிறைவு விழா, கரராரா மைதானத்தில் கோலாகலமாக நடந்தது. உலக உருண்டை மாதிரியில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. முதலில், ஆஸ்திரேலியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதத்தில், கலைஞர்கள் திறமை வெளிப்படுத்தினர். பின், ஆஸ்திரேலியாவின் பிரபல பாடகர்கள் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். இதற்கிடையே, 'உலகின் மின்னல் மனிதன்' என அழைக்கப்படும் முன்னாள் தடகள வீரர் போல்டும் (ஜமைக்கா) பங்கேற்றார். மேடையில் இவர் இசைக்கருவிகளை இசைத்து உற்சாகப்படுத்தினார். இதன்பின், காமன்வெல்த் கொடி இறக்கப்பட்டு, அடுத்து விளையாட்டை நடத்தவுள்ள (2022) பர்மிங்காம் நகரின் மேயர் அன்னே அண்டர்வுட்டிடம் தரப்பட்டது. மூவர்ணக்கொடியுடன் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் வலம் வந்தார். இறுதியாக, வாணவேடிக்கையுடன் விழா முடிவடைந்தது.

செய்னா ஆவேசம்

காமன்வெல்த் விளையாட்டு துவங்கும் முன், செய்னாவின் தந்தை ஹர்விர் சிங்கிற்கு,காமன்வெல்த் கிராமத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இப்பிரச்னை தீரவில்லை எனில் போட்டியில் பங்கேற்க மாட்டேன் என செய்னா தெரிவித்திருந்தார்.

இது குறித்து செய்னா கூறுகையில்,'' எனது தந்தைக்காக எந்த இடத்திலும் சண்டையில் ஈடுபடுவேன். பல ரசிகர்கள், நாட்டை விட தந்தைதான் முக்கியமா என கேள்வி எழுப்பினர். இவர் இல்லாவிட்டால், நான் எப்படி தேசத்திற்காக பதக்க வென்றிருக்க முடியும். இவர் இரண்டு நாட்கள் காமன்வெல்த் கிராமத்திலிருந்து வெளியேதான் இருந்தார். உணவு சாப்பிடும் அறைக்கு வருவதற்கு கூட இவரை அனுமதிக்கவில்லை. இந்த நெருக்கடியில் என்னால் துாங்கவே முடியவில்லை. ஆனால், அணிகளுக்கான போட்டியில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் இருந்தது. சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் பெடரர் 10-12 மணி நேரம் துாங்குவேன் என குறிப்பிட்டு இருந்தார். ஆனால், எனது தந்தையை வெளியில் தவிக்க வைத்துவிட்டு, எப்படி என்னால் துாங்க முடியும். எனது தந்தைக்காக சண்டையில் ஈடுபட்டது எப்படி தவறாகும்,'' என்றார்.

ரூ. 1.5 கோடி பரிசு

இம்முறை, அரியானா மாநிலத்தை சேர்ந்த நட்சத்திரங்கள் 9 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கம் வென்றுள்ளனர். இவர்களுக்கு அம்மாநில அரசு பரிசு அறிவித்துள்ளது. இதன்படி, தங்கம், வெள்ளி வென்றவர்களுக்கு முறையே ரூ. 1.5 கோடி, ரூ. 75 லட்சம் பரிசு தரப்படும். வெண்கலம் கைப்பற்றி நட்சத்திரங்கள் ரூ. 50 லட்சம் பெறுவர். இவர்களுக்கு மாநில அரசுத்துறையில் வேலைவாய்ப்பும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement