Advertisement

யூகி பாம்ப்ரி சாம்பியன்

தைபே: தைபே சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில், சகவீரர் ராம்குமார் ராமநாதனை வீழ்த்தினார்.

சீனதைபேயில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ராம்குமார் ராமநாதன் மோதினர். அபாரமாக ஆடிய யூகி பாம்ப்ரி, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், சாகேத் மைனேனி ஜோடி 4-6, 7-5, 6-10 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டன், ஆன்ட்ரூ ஒயிட்டிங்டன் ஜோடியிடம் தோல்வியடைந்து, 2வது இடம் பிடித்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement