Advertisement

கோஹ்லி தந்த 'பேட்': டேனியலி புது முடிவு

மும்பை: முத்தரப்பு ஒரு நாள் தொடரில் கேப்டன் கோஹ்லி பரிசாத தந்த பேட்டை, இங்கிலாந்து வீராங்கனை டேனியலி பயன்படுத்த உள்ளார்.

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 29. இவருக்கு ரசிகைகள் அதிகம். கடந்த 2014ல், இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை டேனியலி வயாத், 26, இவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். இதை மறுத்த கோஹ்லி, இவருக்கு தனது பேட்டை பரிசாக தந்தார்.

இதற்கிடையே, வரும் 22ல் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் முத்தரப்பு தொடர் இந்திய மண்ணில் துவங்குகிறது. இதில், கோஹ்லி தந்த பேட்டில் விளையாட உள்ளதாக டேனியலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டேனியலி கூறுகையில்,'' கடந்த நவம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது 'டுவென்டி-20' போட்டியில் சதம் அடித்தேன். இந்த பேட் உடைந்துவிட்டது. இதனால், இனி கோஹ்லி தந்த பேட்டை பயன்படுத்த உள்ளேன். எதிர் வரும், முத்தரப்பு தொடரில் இந்த பேட்டுடன் களமிறங்குவேன்,'' என்றார்.



Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement