Advertisement

பைனலுக்கு முன்னேறியது கர்நாடகா

புதுடில்லி: விஜய் ஹசாரே டிராபி தொடரின் பைனலுக்கு கர்நாடகா அணி முன்னேறியது. அரையிறுதியில் மகாராஷ்டிரா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவில் நடக்கும் விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர்) தொடர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. டில்லியில் நடந்த முதல் அரையிறுதியில் கர்நாடகா, மகாராஷ்டிரா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மகாராஷ்டிரா அணி 'பேட்டிங்' தேர்வு செய்தது.

மகாராஷ்டிரா அணிக்கு கெய்க்வாத் (1), கேப்டன் ராகுல் திரிபாதி (16) ஏமாற்றினர். அன்கித் பாவ்னே 18 ரன்களில் திரும்பினார். ஸ்ரீகாந்த் முந்தே (50), நாசத் (42) ஆறுதல் தந்தனர். முடிவில், மகாராஷ்டிரா அணி 44.3 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக கிருஷ்ணப்பா கவுதம் 3 விக்கெட் வீழ்த்தினார்.

அகர்வால் அசத்தல் சதம்

எட்டிவிடும் இலக்கை துரத்திய கர்நாடகா அணிக்கு மயாங்க் அகர்வால், கேப்டன் கருண் நாயர் அபார துவக்கம் தந்தனர். எதிரணி பந்துவீச்சை சிதறடித்த இருவரும் அரை சதம் கடந்தனர். மயாங்க் அகர்வால் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். கர்நாடகா அணி 30.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கருண் நாயர் (70), சமர்த் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதன் மூலம், இத்தொடரில் கர்நாடகா அணி மூன்றாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது. இதற்கு முன், பங்கேற்ற இரண்டு பைனலிலும் (2013-14, 2014-15) கோப்பை வென்றது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement