Advertisement

முதல் மோதலில் சென்னை–மும்பை: ஐ.பி.எல்., அட்டவணை அறிவிப்பு

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில், வரும் ஏப். 7 ல் நடக்கவுள்ள முதல் போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதுகின்றன.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், 2008 முதல் ஆண்டுதோறும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான 11வது சீசன், வரும் ஏப். 7 முதல் மே 27 வரை நாட்டின் முக்கிய 9 நகரங்களில் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஏப். 7 ல், மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' மும்பை அணி, தடையில் இருந்து மீண்டு, 2 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கும் சென்னை அணியை சந்திக்கிறது. பைனல், மே 27 ல் இங்கு தான் நடக்கவுள்ளது.

ஏப். 8 ல், டில்லி - பஞ்சாப் (இடம்: டில்லி), கோல்கட்டா-பெங்களூரு (இடம்: கோல்கட்டா) என இரண்டு போட்டிகள் நடக்கவுள்ளன. இரண்டு ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் மற்றொரு அணியான ராஜஸ்தான் அணி, தனது முதல் போட்டியில் ஐதராபாத் அணியை ஏப். 9ல் சந்திக்கிறது. ஜெய்ப்பூரில், ஏப். 11ல் நடக்கவுள்ள போட்டியில் ராஜஸ்தான், டில்லி அணிகள் மோதவுள்ளன. பஞ்சாப் அணி, சொந்த மண்ணில் பங்கேற்கும் 3 போட்டிகளை இந்துாரிலும், 4 போட்டிகளை மொகாலியிலும் விளையாடும். முதல் தகுதிச் சுற்றுப் போட்டி, மே 22ல், மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ளது. 'எலிமினேட்டர்' (மே 23) மற்றும் இரண்டாவது தகுதிச் சுற்றுப் (மே 25) போட்டிக்கான இடம் இன்னும் முடிவாகவில்லை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement