Advertisement

கால்பந்து: தமிழக பெண்கள் சாதனை

கட்டாக்: தேசிய 'சீனியர்' கால்பந்து சாம்பியன்ஷிப்பில், முதல் முறையாக கோப்பை வென்று தமிழக பெண்கள் அணி சாதித்தது.

ஒடிசாவில் பெண்களுக்கான 23வது தேசிய 'சீனியர்' கால்பந்து சாம்பியன்ஷிப் நடந்தது. கட்டாக்கில் நடந்த பைனலில் தமிழகம், மணிப்பூர் அணிகள் மோதின.

முதல் பைனல் என்ற எவ்வித பதட்டமும் இல்லாமல் தமிழக அணி விளையாடியது. போட்டியின் துவக்கத்திலேயே எதிரணிக்கு தமிழக வீராங்கனைகள் 'ஷாக்' தந்தனர். மூன்றாவது நிமிடத்தில் இந்துமதி கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஜொலித்த தமிழக அணிக்கு, 40வது நிமிடத்தில் இந்திராணி கைகொடுத்தார். இதனால், முதல் பாதியில் தமிழக அணி 2-0 என முன்னிலை பெற்றது.

இதற்கு, 57வது நிமிடத்தில் எதிரணி வீராங்கனை ராடன்பாலா கோல் அடித்தார். இரு அணியினரும் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. முடிவில், தமிழக அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், இத்தொடரில் முதல் முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது.



Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement