Advertisement

சென்னை ஓபன்: காலிறுதியில் பாம்ப்ரி

சென்னை: சென்னையில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சித்தார்த் ரவாத் மோதினர். மொத்தம் 58 நிமிடம் நீடித்த போட்டியில், அபாரமாக ஆடிய பாம்ப்ரி, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்ப்சன், 6-3, 6-2 என, தாய்லாந்தின் விஷாயாவை தோற்கடித்து, காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்தியாவின் அர்ஜுன் காடே, 4-6, 2-6 என, எகிப்தின் முகமது சப்வாத்திடம் தோல்வியடைந்து வெளியேறினார். இதேபோல, இந்தியாவின் அபினவ் சஞ்சீவ் சண்முகம், 2-6, 4-6 என, தென் கொரியாவின் டக்ஹீ லீயிடம் வீழ்ந்தார்.

மற்ற ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுப் போட்டிகளில் ஸ்பெயினின் பெட்ரோ மார்டினஸ், செர்பியாவின் டேனிலோ பெட்ரோவிச், பிரான்சின் ஆன்டோனி எஸ்கோபியர், ஜப்பானின் யசுடகா உசியமா ஆகியோர் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தனர்.

அரையிறுதியில் ஸ்ரீராம் ஜோடி

இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, விஷ்ணுவர்தன் ஜோடி, 7-5, 6-3 என, இத்தாலியின் பெகா, பெல்ஜியத்தின் கிம்மர் ஜோடியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, சுவிட்சர்லாந்தின் லுாகா மார்கரோலி ஜோடி, 6-7, 6-3, 13-11 என, துருக்கியின் அல்டுனா, எகிப்தின் முகமது சப்வாத் ஜோடியை வீழ்த்தியது.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் குனால் ஆனந்த், அன்வித் பென்ட்ரி ஜோடி 0-6, 2-6 என, தாய்லாந்தின் சன்சாட், சன்சாய் ரதிவதானா ஜோடியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இதேபோல, இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, 4-6, 6-2, 4-10 என, துருக்கியின் செம் இல்கெல், செர்பியாவின் டேனிலோ பெட்ரோவிச் ஜோடியிடம் தோல்வியடைந்து ஏமாற்றியது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement