Advertisement

தமிழக அணி வெற்றி

சென்னை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே ஒரு நாள் தொடரின் லீக் போட்டியில் தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் விஜய் ஹசாரே டிராபி ஒரு நாள் உள்ளூர் தொடர் நடக்கிறது. சென்னையில் நடந்த லீக் போட்டியில் தமிழகம், ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தமிழக அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.

ராஜஸ்தான் அணிக்கு அமித் குமார் (0), யாஸ் கோத்தாரி (13) ஏமாற்றினர். அஷ்வின் பந்தில் அர்ஜித் குப்தா (27) அவுட்டானார். சாய் கிஷோர் 'சுழலில்' பிஷ்ட் (36), கம்லேஷ் நாகர்கோட்டி (4) சிக்கினர். முடிவில், ராஜஸ்தான் அணி 38.2 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. தமிழகம் சார்பில் அதிகபட்சமாக கிஷோர் 5 விக்கெட் வீழ்த்தினார்.

அபராஜித் அரை சதம்

எட்டிவிடும் இலக்கை விரட்டிய தமிழக அணிக்கு, கவுசிக் காந்தி (3), ஸ்ரீதர் ராஜு (28) விரைவில் திரும்பினர். ஜெகதீசன், கேப்டன் பாபா அபராஜித் வெற்றியை எளிதாக்கினர். ஜெகதீசன் 39 ரன்கள் எடுத்தார். அபராஜித் அரை சதம் கடந்தார். தமிழக அணி 23.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபராஜித் (55), அனிருத் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.



Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement