Advertisement

வில்லியம்சன் விளாசல்: நியூசி., வெற்றி

வெலிங்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முத்தரப்பு 'டுவென்டி-20' லீக் போட்டியில், கேப்டன் வில்லியம்சன், கப்டில் அரைசதம் கடந்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி, 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு 'டுவென்டி-20' தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் நியூசிலாந்தில் நடக்கிறது. வெலிங்டனில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.

கப்டில் கலக்கல்

நியூசிலாந்து அணிக்கு முன்ரோ (11) சுமாரான துவக்கம் தந்தார். பின், இணைந்த கப்டில், கேப்டன் வில்லியம்சன் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் கடந்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தபோது, கப்டில் (65) ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் 'டக்-அவுட்' ஆனார். ஜோர்டான் பந்தில் வில்லியம்சன் (72) சிக்கினார்.

நியூசிலாந்து அணி, 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு, 196 ரன்கள் எடுத்தது. ராஸ் டெய்லர் (1), செய்பெர்ட் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.

மாலன் ஆறுதல்

கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (8) ஏமாற்றினார். ஹேல்ஸ், 47 ரன்கள் விளாசினார். வின்சி (10), கேப்டன் பட்லர் (2) நிலைக்கவில்லை. மாலன் (59) ஆறுதல் தந்தார். பில்லிங்ஸ் (12), ஜோர்டான் (6) உள்ளிட்ட மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். இங்கிலாந்து அணி, 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 184 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. ரஷித் (8), மார்க் உட் (5) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் பவுல்ட், சான்ட்னர், சவுத்தீ தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், வென்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement