Advertisement

காமன்வெல்த்: தீபா கர்மாகர் விலகல்

புதுடில்லி: ''காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் பங்கேற்பது உறுதியில்லை,'' என, அவரது பயிற்சியாளர் பிஸ்வேஷ்வர் நந்தி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில், வரும் ஏப். 4-15ல் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில், இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் பங்கேற்க வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது. இவர், கடந்த 2016ல் பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் 'வால்ட்' பிரிவில் 4வது இடம் பிடித்தார். இதன்மூலம் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். தவிர இவர், கடந்த 2014ல் நடந்த கிளாஸ்கோ காமல்வெல்த் விளையாட்டில், வால்ட் பிரிவில் வெண்கலம் கைப்பற்றினார். கடந்த ஆண்டு முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட இவர், அதன்பின் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து தீபா கர்மாகர் பயிற்சியாளர் பிஸ்வேஷ்வர் நந்தி கூறுகையில், ''தீபா கர்மாகர், முழங்கால் காயத்தில் இருந்து மீண்ட போதும், போட்டியில் விளையாடக்கூடிய உடற்தகுதியை இன்னும் முழுமையாக பெறவில்லை. எனவே வரும் ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு இல்லை. விரைவில் போதிய உடற்தகுதி பெறும் பட்சத்தில், வரும் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதம் இந்தோனேஷியாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டில் பங்கேற்கலாம்,'' என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement