Advertisement

'டுவென்டி–20': டுமினி கேப்டன்

போர்ட் எலிசபெத்: இந்தியாவுக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கும் தென் ஆப்ரிக்க அணிக்கு டுமினி கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் 18 ல் ஜோகனஸ்பர்க் நகரில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் முறையே செஞ்சூரியன் (பிப். 21), கேப்டவுன் (பிப். 24) நகரங்களில் நடக்கவுள்ளன.

இத்தொடருக்கான 14 பேர் கொண்ட தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக டுமினி நியமிக்கப்பட்டுள்ளார். ரெகுலர் கேப்டன் டுபிளசி, சமீபத்தில் டர்பனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது, ஆள்காட்டி விரலில் காயமடைந்தார். ஒருநாள் தொடருக்கு கேப்டனாக செயல்படும் மார்க்ரம், சீனியர் வீரர் ஆம்லாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாகிருக்கு இடம் கிடைக்கவில்லை.

இளம் வீரர்களான கிறிஸ்டியான் ஜான்கர், ஹெயின்ரிச் கிளாசன், ஜூனியர் டாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தென் ஆப்ரிக்க அணி: டுமினி (கேப்டன்), பெகார்டியன், டிவிலியர்ஸ், ரீஜா ஹென்றிக்ஸ், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ஹெயின்ரிச் கிளாசன், டேன் பாட்டர்சன், கிறிஸ்டியான் ஜான்கர், ஆரோன் பங்கிசோ, பெலுக்வாயோ, ஜூனியர் டாலா, ஷாம்சி, ஜான்-ஜான் ஸ்முட்ஸ்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement