Advertisement

யூகி பாம்ப்ரி அபாரம்

சென்னை: சென்னையில் நடக்கும் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சண்முகம் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

சென்னையில்ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி, ஸ்பெயினின் பெர்னபே ஜபாடா மிராலஸ் மோதினர். முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றிய பாம்ப்ரி, 'டை-பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 7-6 என போராடி தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 17 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி 6-1, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

சண்முகம் முன்னேற்றம்

மற்றொரு முதல் சுற்றில் இந்திய வீரர் அபினவ் சஞ்சீவ் சண்முகம், ரஷ்யாவின் இவான் நெடில்கோ மோதினர். முதல் செட்டை 3-6 என சண்முகம் பறிகொடுத்தார். இரண்டாவது செட்டில் இவர் 5-4 என முன்னிலை பெற்றிருந்தபோது, இவான் விலகினார். இதனையடுத்து, சண்முகம் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டார்.

மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ் குமார், பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் தோல்வியடைந்தனர்.

இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் விஜய் சுந்தர் பிரசாந்த், பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் ஜோடி, 7-6, 6-1 என, சகநாட்டை சேர்ந்த அர்ஜுன் காடே, தக்சினேஸ்வர் ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், ஸ்பெயினின் பெட்ரோ மார்டினஸ் ஜோடி தோல்வியடைந்தது.



Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement