Advertisement

புவனேஷ்வர் நீக்கம் சரியா

செஞ்சூரியன்: கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர், 10 'கேட்ச்' செய்த சகாவுக்குப் பதில் இஷாந்த், பார்த்திவ் படேல் சேர்க்கப்பட்டதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து, முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியது:

இந்திய அணியின் 'பலியாடு' தவான் தான். ஏதாவது ஒரு போட்டியில் ஏமாற்றி விட்டால் போதும், உடனே நீக்கி விடுவார். கேப்டவுன் டெஸ்டின் முதல் ஒரு மணி நேரத்தில் 3 விக்கெட் வீழ்த்தியவர் புவனேஷ்வர். இவருக்குப் பதில் இஷாந்த் சர்மாவை ஏன் கொண்டு வந்தனர் என்றே புரியவில்லை. ஷமி அல்லது பும்ராவைத் தான் நீக்கியிருக்க வேண்டும்.

உயரமாக உள்ள இஷாந்த், நன்கு பந்தை 'பவுன்சர்' செய்வார் என்கின்றனர். ஆனால், ஒரு ஓவருக்கு 2 'பவுன்ருக்கு' மேல் வீச முடியாது. அதேநேரம், ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் 'சுவிங்' செய்து வீசுவார் புவனேஷ்வர்.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

முன்னாள் வீரர் லட்சுமண் கூறுகையில்,'' புவனேஷ்வர் இடம் பெறாதது ஆச்சரியமாக உள்ளது. பவுலிங் மட்டுமன்றி, பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவார் இவர்,'' என்றார்.



14

இந்திய அணி விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல். அன்னியமண்ணில் கடைசியாக 2004ல் சிட்னி டெஸ்டில் (ஆஸி.,) விளையாடினார். இதன் பின், 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் நேற்று அன்னிய மண்ணில் களமிறங்கினார். இவர் அறிமுகம் ஆன அணியில் இருந்த எந்த ஒரு வீரரும், தற்போதைய இந்திய அணியில் கிடையாது.



35

கடந்த 2014-15 ஆஸ்திரேலிய தொடரில், முதன் முதலில் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக களமிறங்கினார் கோஹ்லி. இதன் பின், ஒவ்வோரு டெஸ்டில் களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியிலும் தொடர்ந்து மாற்றம் செய்யப்படுகிறது.

நேற்று தனது 35 வது டெஸ்டில் தலைமை ஏற்றார் கோஹ்லி. இம்முறை தவான், புவனேஷ்வர் குமார், சகா நீக்கப்பட்டு, இஷாந்த் சர்மா, பார்த்திவ் படேல், லோகேஷ் ராகுல் அணியில் இடம் பிடித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement