Advertisement

தேசிய ஹாக்கி: காலிறுதியில் தமிழகம்

இம்பால்: தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு தமிழக அணி முன்னேறியது. நேற்று நடந்த லீக் போட்டியில், தமிழக அணி 4-1 என்ற கோல் கணக்கில் மணிப்பூர் அணியை வீழ்த்தியது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில், ஆண்களுக்கான சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் 'டி' பிரிவு லீக் போட்டியில், தமிழகம், மணிப்பூர் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய தமிழக அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழக அணி சார்பில் ஹரிஹரன் (23வது நிமிடம்), சில்வர்ஸ்டாலின் (25வது), சரவணகுமார் (50வது), நிரஞ்சன் சாய் கணேஷ் (57 வது) தலா ஒரு கோல் அடித்தனர். மணிப்பூர் அணிக்கு இபங்கோ சிங் (55வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.

இந்த வெற்றியின்மூலம் 'டி' பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த தமிழக அணி, காலிறுதிக்கு முன்னேறியது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement