Advertisement

கால்பந்து: கோல்கட்டா வெற்றி

கவுகாத்தி: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில், கோல்கட்டா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வடகிழக்கு யுனைடெட் அணியை வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 4வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. அசாமின் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில், கோல்கட்டா, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட கோல்கட்டா அணிக்கு, 73வது நிமிடத்தில் ஜிகுவின்ஹா, ஒரு கோல் அடித்தார். இதற்கு வடகிழக்கு அணியினரால் பதிலடி தர முடியவில்லை. ஆட்டநேர முடிவில், கோல்கட்டா அணி, 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

கோல்கட்டா அணி, இதுவரை விளையாடிய 9 போட்டியில், 3 வெற்றி, 3 தோல்வி, 3 'டிரா' உட்பட 12 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு முன்னேறியது. வடகிழக்கு அணி, 7 புள்ளியுடன், 9வது இடத்தில் நீடிக்கிறது. முதல் மூன்று இடங்களில் முறையே பெங்களூரு (18 புள்ளி), சென்னை (17), புனே (16) அணிகள் உள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement