Advertisement

ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா–அர்ஜென்டினா

புவனேஷ்வர்: உலக ஹாக்கி லீக் தொடரின் அரையிறுதியில், இந்திய அணி வலிமையான அர்ஜென்டினாவை சந்திக்கிறது.

இந்தியாவில், உலக ஹாக்கி லீக் பைனல் தொடர் நடக்கிறது. இதன் லீக் சுற்றில் ஒரு வெற்றி கூட பெறாத இந்திய அணி (1 'டிரா', 2 தோல்வி), 'பி' பிரிவில் கடைசி இடம் பிடித்தது. இதனால் காலிறுதியில் இந்திய அணி, 'ஏ' பிரிவில் 3 வெற்றியுடன் முதலிடம் பெற்ற பெல்ஜியத்தை எதிர்கொண்டது.

வழக்கத்துக்கு மாறாக இந்திய வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். இதையடுத்து, ரியோ ஒலிம்பிக்கில் (2016) வெ ள்ளி வென்ற பெல்ஜியத்தை, உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் இந்திய அணி 'சடன் டெத்' முறையில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.

நேற்று நடந்த மற்றொரு காலிறுதியில் அர்ஜென்டினா, 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்றது. இதையடுத்து, இன்று நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி, ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, உலகின் 'நம்பர்-1' அணியான அர்ஜென்டினாவை சந்திக்கவுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement