Advertisement

ஸ்டோக்ஸ், ஹேல்ஸ் வாய்ப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் இடம் பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத உள்ளன. முதல் போட்டி, வரும் ஜன. 14ல் மெல்போர்னில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் பிரிஸ்பேன் (ஜன. 19), சிட்னி (ஜன. 21), அடிலெய்டு (ஜன. 26), பெர்த் (ஜன. 28) நகரங்களில் நடக்கவுள்ளன.

இத்தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இதில் 'ஆல்-ரவுண்டர்' பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் இடம் பிடித்துள்ளனர். கடந்த செப்டம் மாதம், பிரிஸ்டோலில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இவர்கள் இருவரும், ஒரு தனிநபரை தாக்கியதால், ஆஷஸ் தொடருக்கு புறக்கணிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் ஒழுங்குநடவடிக்கை குழுவின் முடிவைப் பொறுத்தே இவர்களுக்கு 'லெவன்' அணியில் இடம் கிடைக்கும். தற்போது ஸ்டோக்ஸ், நியூசிலாந்தில் நடக்கும் உள்ளூர் போட்டியில் விளையாடி வருகிறார்.

இங்கிலாந்து அணி: இயான் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோவ், ஜாக் பால், சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், டாம் கரண், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement