Advertisement

கிளாசிக் செஸ்: ஆனந்த் 'டிரா'

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில், கிளாசிக் செஸ் தொடர் நடக்கிறது.

முதல் நான்கு சுற்று போட்டிகளை 'டிரா' செய்த இந்தியாவின் ஆனந்த், ஐந்தாவது சுற்றில் வீழ்ந்தார். நேற்று ஆறாவது சுற்றில் ரஷ்யாவின் கர்ஜாகினை சந்தித்தார். இம்முறை ஆனந்த், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். இப்போட்டி 20வது நகர்த்தலில், 'டிரா' ஆனது.

ஆறு சுற்று முடிவில் ஐந்து சுற்று முடிவில், 2.5 புள்ளிகள் பெற்ற ஆனந்த், பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளார். இத்தாலியின் பேபியானோ காருணா (4) முதலிடத்தில் உள்ளார். உலக சாம்பியன் கார்ல்சன் (3), 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.



Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement