Advertisement

ஸ்ரீகாந்த் 'நம்பர்–4'

புதுடில்லி: உலக பாட்மின்டன் தரவரிசையில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 'நம்பர்-4' இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், 5வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் பிரனாய், 'நம்பர்-10' இடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் சாய் பிரனீத், 17 வது இடத்தில் தொடர்கிறார். சமீபத்தில் முடிந்த பல்கேரிய ஓபன், இந்தியா சர்வதேச சீரிஸ் தொடர்களில் பட்டம் வென்ற, 16 வயது இளம் வீரர் லக்சயா சென், 108 வது இடத்தில் இருந்து 89வது இடத்துக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சிந்து, செய்னா நேவல் முறையே 3, 10வது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா, சிக்கி ரெட்டி ஜோடி 19வது இடத்தில் தொடர்கிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement