Advertisement

கோஹ்லி '20,000': ஹர்பஜன் கணிப்பு

புதுடில்லி: '' டெஸ்ட் அரங்கில் இப்போதுள்ள 'பார்ம்' தொடர்ந்தால், கோஹ்லி 20,000 ரன்கள் விளாசுவார்,'' என, இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி, 29. இதுவரை 63 டெஸ்டில் 5,268 ரன்கள் குவித்துள்ளார். தவிர, 202 ஒருநாள் (9,030 ரன்), 55 'டுவென்டி-20' (1,956) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து ரன்கள் குவித்து வரும் கோஹ்லி, பேட்டிங், கேப்டன் என, இரண்டு பிரிவிலும் அடுத்தடுத்த பல சாதனைகள் படைக்கிறார். 'இவர், டெஸ்டில் 10,000 ரன்கள் எடுப்பார்,' என, கடந்த 2010ல் இந்திய அணியின் 'சுழல்' வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து தற்போது ஹர்பஜன் சிங் கூறியது: கோஹ்லி டெஸ்ட் அரங்கில் 10,000 ரன்கள் எடுப்பார் என, குறைவாக கணித்து விட்டேன். ஏனெனில், இவருக்கு 20,000 ரன்கள் எடுக்கும் திறமை உள்ளது. கிரிக்கெட்டில் இதுவரை யாரும் நிகழ்த்தாத பல சாதனைகளை இவர் ஏற்படுத்தி வருகிறார். இவர் தனது உடற்தகுதியை பாராமரிக்கும் விதம், இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தும் திறமை, அசத்தலாக பேட்டிங் செய்வது என, அனைத்து விஷயங்களிலும் வியக்க வைக்கிறார். தவிர, மைதானத்துக்கு வெ ளியிலும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

சிறந்த கேப்டன்:

இந்திய அணியில் பல கேப்டன்களிடம் விளையாடி உள்ளேன். இதில் என்னைப் பொறுத்தவரையில் கங்குலி தான் 'பெஸ்ட்' கேப்டன். 'மேட்ச் பிக்சிங்' சர்ச்சைகளால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட்டை மீண்டும் வெற்றிகரமான பாதைக்கு திருப்பினார். தற்போது இதே வேகத்துடன் இந்திய அணியை முன்னெடுத்துச் செல்கிறார் கேப்டன் கோஹ்லி. தனது தோள்களில் அணியை தாங்குகிறார். தனது மற்றும் அணியை திறமையை எவ்வித சர்ச்சைகளும் பாதித்து விடாமல் தொடர்ந்து அசத்துவார் என்பது உறுதி. இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement