Advertisement

ஆசிய ஹாக்கி: இந்தியா – வங்கம் மோதல்

தாகா: ஆசிய கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இன்று இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு (ஏ.எச்.எப்.,) சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடத்தப்படுகிறது. இதன் 10வது 'சீசன்' வங்கதேச தலைநகர் தாகாவில் நடக்கிறது. இதில், இந்தியா, மலேசியா, சீனா உள்ளிட்ட 8 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி, 'ஏ' பிரிவில் ஜப்பான், பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

புதிய பயிற்சியாளர் ஜோயர்டு மரிஜ்னே (நெதர்லாந்து) தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, முதல் போட்டியில் 5-1 என ஜப்பானை வீழ்த்தியது. இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. ஜப்பானுக்கு எதிராக கோல் அடித்து அசத்திய இந்தியாவின் சுனில், லலித் உபாத்யாய், ராமன்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் மீண்டும் கைகொடுக்கலாம்.

வங்கதேச அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் 0-7 என பாகிஸ்தானிடம் வீழ்ந்தது. எனவே இன்று சொந்த மண்ணில் எழுச்சி பெற முயற்சிக்கலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement