Advertisement

மன்னிப்பு கேட்ட கவுகாத்தி ரசிகர்கள்

கவுகாத்தி: ஆஸ்திரேலிய அணி வீரர்களிடம் கவுகாத்தி ரசிகர்கள் மன்னிப்பு கேட்டனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா மோதிய 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. போட்டி நடந்த கவுகாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில்இருந்து ஓட்டலுக்கு திரும்பிய போது, ஆஸ்திரேலிய வீரர்கள் சென்ற பஸ் மீது கல் வீசப்பட்டது. இதில், ஜன்னல் கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீரர்களுக்கு காயம் ஏற்படவில்லை. இதற்கு, இந்திய 'சுழல்' வீரர் அஷ்வின், வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கவுகாத்தியை சேர்ந்த ரசிகர்கள் சிலர் ஆஸ்திரேலிய அணி வீரர்களிடம், நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டனர். இதற்காக, வீரர்கள் தங்கியிருந்து ஓட்டல் முன்பு, மன்னிப்பு வார்த்தைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நின்றனர். அதில்,' அன்புக்குரிய ஆஸ்திரேலிய வீரர்களே எங்களை மன்னித்து விடுங்கள்,' என, எழுதி இருந்தது.



Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement