Advertisement

பாகிஸ்தான் கால்பந்து 'சஸ்பெண்ட்'

லாகூர்: மூன்றாவது நபரின் தலையீடு காரணமாக, பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை 'பிபா' சஸ்பெண்ட் செய்துள்ளது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பில் ('பிபா') பாகிஸ்தான் அணி உறுப்பினராக உள்ளது. இந்நிலையில், கடந்த 2015ல் லாகூர் கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்தலில் மோதல் ஏற்பட்டது. இதனால், பாகிஸ்தான் கூட்டமைப்பு (பி.எப்.எப்.,) இரண்டாக பிரிந்தது. இந்த வழக்கை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம், பி.எப்.எப்., கணக்குகளை நிர்வகிக்க நபர் ஒருவர் நீதிமன்றம் சார்பில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பி.எப்.எப். அமைப்பை 'சஸ்பெண்ட்' செய்து 'பிபா' உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து 'பிபா' வெளியிட்ட அறிக்கையில்,' பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பின் கணக்கு மற்றும் அலுவலக பணிகள் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம்தான் இன்னும் உள்ளன. நிர்வாகத்தில் மூன்றாவது நபரின் தலையீடு, எங்களின் விதிமுறையை மீறுவதாகும். இதனால், பி.எப்.எப். அமைப்பை 'சஸ்பெண்ட்' செய்கிறோம். மூன்றாவது நபரின் தலையீடு நீங்கும் வரையில், இது தொடரும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், 'பிபா' மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் எவ்வித போட்டிகளிலும் பாகிஸ்தான் பங்கேற்க முடியாது.



Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement