Advertisement

தமிழ் தலைவாஸ் 'திரில்' வெற்றி

சோனேபட்: உ.பி., அணிக்கு எதிரான புரோ கபடி லீக் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி 34-33 என 'திரில்' வெற்றி பெற்றது.

தேசிய அளவில், புரோ கபடி லீக் தொடரின் 5வது சீசன் நடக்கிறது. ஹரியானா மாநிலம் சோனேபட் நகரில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், உ.பி., அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் உ.பி., அணி 18-12 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட தமிழ் தலைவாஸ் அணி, ஒருகட்டத்தில் 30-31 என இருந்தது. அப்போது 'ரைடு' செய்த அஜய் தாகூர், சாமர்த்தியமாக செயல்பட்டு 3 புள்ளிகள் பெற்றுத் தர 33-31 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் போட்டியை 'டை' செய்ய முயற்சித்த உ.பி., அணியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 34-33 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு அஜய் தாகூர், பிரபஞ்சன் தலா 8 புள்ளிகள் பெற்றுத் தந்தனர். உ.பி., அணிக்கு நிதின் தோமர் (14 புள்ளி) கைகொடுத்தார்.

'பி' பிரிவில் தமிழ் தலைவாஸ் இதுவரை விளையாடிய 10 போட்டியில், 2 வெற்றி, 6 தோல்வி, 2 'டை' என 21 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. முதலிரண்டு இடங்களில் முறையே பெங்கால் (50 புள்ளி), உ.பி., (37) அணிகள் உள்ளன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement