Advertisement

ஆப்கன் மைதானத்தில் தற்கொலைப்படை தாக்குதல்

காபூல்: ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தின் வெளியில் நடந்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது, மைதானத்தில் நுழைய வந்த நபரை பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, அந்த நபர் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில் போலீசார் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இரு போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் காயமடைந்தனர். மர்ம நபரை மைதானத்துக்குள் செல்ல விடாமல் தடுத்ததால், பலர் காப்பற்றப்பட்டனர். இச்சம்பவத்தில் வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement