Advertisement

பாரிஸ், லாஸ் ஏஞ்சல்சில் ஒலிம்பிக்

லிமா: ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமையை பாரிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்கள் பெற்றன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது. வரும் 2020ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ளது. 33 (2024), 34வது (2028) ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான நகரங்களை தேர்வு செய்யும் பணி நடந்தது, 2024ம் ஆண்டில் போட்டியை நடத்த ஹாம்பர்க் (ஜெர்மனி), ரோம் (இத்தாலி), பாரிஸ் (பிரான்ஸ்), புடாபெஸ்ட் (ஹங்கேரி) உள்ளிட்ட நகரங்கள் விருப்பம் தெரிவித்தன.

பாரிஸ் உறுதி: ஆனால், நிதி பிரச்னை காரணமாக பாரிசைத்தவிர மற்ற நகரங்கள் போட்டியிலிருந்து விலகின. இதனால், 2024ல் பாரிசில் ஒலிம்பிக் அரங்கேறுவது உறுதியானது. இதைப்போல, 2028ம் ஆண்டில் போட்டியை நடத்த அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மட்டுமே விருப்பம் தெரிவித்தது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இந்நிலையில், பெரு நாட்டில் உள்ள லிமா நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் உறுப்பினர்கள் வாக்குப்பதிவு செய்து இரு நகரங்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர். இதனால், பாரிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

3வது முறை

ஒலிம்பிக் போட்டியை அதிக முறை (3) நடத்திய நகரம் என்ற பெருமையை லண்டனுடன் (1908, 48,2012) பாரிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் பகிர்ந்து கொள்கின்றன. ஏற்கனவே, பாரிஸ் நகரில் 1900, 24ம் ஆண்டில் ஒலிம்பிக் நடந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ், 1932, 84ல் போட்டியை நடத்தியுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • murugan - Boissy-saint-leger,பிரான்ஸ்


    மிகவும் ஆவலாக உள்ளோம் பாரிசில் ஒலிம்பிக்கை எதிர்பார்த்து ........................................................

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement