Advertisement

சென்னை அணியில் நெல்சன்

சென்னை: சென்னை கால்பந்து அணியில் நெதர்லாந்தின் கிரிகரி நெல்சன் சேர்க்கப்பட்டார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கால்பந்து தொடர் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,). இதில் 2015ல் சாம்பியன் பட்டம் வென்ற அணி சென்னை. இந்த ஆண்டுக்கான சென்னை அணியில் நெதர்லாந்து வீரர் கிரிகரி நெல்சன், 29, ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தனது 18 வயதில் உள்ளூர் அல்காமர் அணியில் விளையாடிய இவர், நெதர்லாந்து அணியின் 17, 18 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளில் பங்கேற்றுள்ளார்.

பின் பல்கேரியாவின் சோபியா, உக்ரைனின் டன்ஸ்க் அணிகளில் விளையாடியுள்ளார். 2017, ஜனவரி மாதம் பஹ்ரைனின் அல் முஹாரக் அணியில் இணைந்தார். இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில், இந்த ஆண்டு சென்னை அணியில் விளையாட உள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement