Advertisement

விபத்தில் தப்பிய ரெய்னா

இடாவா: இந்திய வீரர் ரெய்னா அதிர்ஷ்டவசமாக கார் விபத்திலிருந்து தப்பினார்.

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ரெய்னா, 30. தேசிய அணியில் இடம் கிடைக்காததால், உள்ளூர் தொடரான துலீப் டிராபியில் பங்கேற்கிறார். இவரது தலைமையிலான இந்தியா புளூ அணி, இன்று இந்தியா ரெட் அணியை எதிர் கொள்கிறது. உ.பி., மாநிலம் கான்பூரில் இன்று போட்டி துவங்குகிறது.

பாதிப்பு இல்லை:

இதற்காக, நேற்று அதிகாலை உ.பி.,யின் காஜியாபாத் நகரிலிருந்து கான்பூருக்கு ரேஞ்ச் ரோவர் காரில் சென்று கொண்டிருந்தார். அதிகாலை 2 மணி அளவில் இடாவா நகரின் சாலையில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக காரின் பின்பக்க டயர் வெடித்தது. அதிர்ஷ்டவசமாக, எவ்வித பாதிப்பும் இல்லாமல் கார் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. பின், உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின் மற்றொரு காரில், ரெய்னா பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement