Advertisement

துப்பாக்கி சுடுதல்: இந்திய ஜோடி தங்கம்

அஸ்தானா: ஆசிய 'ஷாட்கன்' துப்பாக்கி சுடுதல் 'ஸ்கீட்' கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மைராஜ் அகமது கான், ராஷ்மி ரத்தோர் ஜோடி தங்கம் வென்றது.

கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில், 7வது ஆசிய 'ஷாட்கன்' துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. இதன் 'ஸ்கீட்' கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மைராஜ் அகமது கான், ராஷ்மி ரத்தோர் ஜோடி 28-27 என சீனாவின் லியு ஜியாங்சி, கயோ ஜியான்மி ஜோடியை வீழ்த்தி, தங்கம் வென்றது.

இத்தொடரில் இந்தியாவுக்கு 3 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்கள் கிடைத்தன. ஆண்களுக்கான தனிநபர் 'டபுள் டிராப்' பிரிவில் இந்தியாவின் அன்குர் மிட்டல் தங்கம் வென்றார். இதேபோல, 'டபுள் டிராப்' அணிகளுக்கான போட்டியிலும் அன்குர் மிட்டல் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement