Advertisement

ஆசிய கூடைப்பந்து: இந்தியா 'ஹாட்ரிக்' தோல்வி

புதுடில்லி: ஆசிய கோப்பை கூடைப்பந்து லீக் போட்டியில், இந்திய அணி 78-87 என சிரியாவிடம் தோல்வி அடைந்தது.

லெபனானில், 29வது ஆசிய கோப்பை கூடைப்பந்து தொடர் நடக்கிறது. இதில் இந்திய அணி, 'ஏ' பிரிவில் ஜோர்டான், சிரியா, ஈரான் அணிகளுடன் இடம் பெற்றிருந்தது.

முதலிரண்டு லீக் போட்டிகளில் ஈரான், ஜோர்டான் அணிகளிடம் வீழ்ந்த இந்தியா, மூன்றாவது போட்டியில் சிரியா அணியை சந்தித்தது. இதில் இந்திய அணி 78-87 (25-17, 26-18, 17-25, 10-27) என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் அண்ணாதுரை, அதிகபட்சமாக 20 புள்ளிகள் பெற்றுத் தந்தார்.

இதனையடுத்து மூன்று லீக் போட்டியிலும் தோல்வியடைந்த இந்தியா, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement