Advertisement

செஸ்: ஆனந்த் 'இரண்டு'

செயின்ட் லுாயிஸ்: சின்க்பீல்டு கோப்பை செஸ் தொடரில் கடைசி போட்டியை 'டிரா' செய்த இந்தியாவின் ஆனந்த், இரண்டாவது இடம் பிடித்தார்.

அமெரிக்காவில், 5வது சின்க்பீல்டு கோப்பை செஸ் தொடர் நடந்தது. மொத்தம் 9 சுற்றுக்கள் கொண்ட இதில், இந்தியாவின் ஆனந்த், 'உலக சாம்பியன்' நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், ஆர்மேனியாவின் லெவான் ஆரோனியன் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர்.

முதல் 8 சுற்றில் 2 வெற்றி, 6 'டிரா' செய்த ஆனந்த், 9வது மற்றும் கடைசி சுற்றில், பிலிப்பைன்ஸ் வீரர் சோ வெஸ்லேயை சந்தித்தார். இதில் ஆனந்த் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார்.

33 வது நகர்த்தலின் போது, இப்போட்டி 'டிரா' ஆனது. மற்ற போட்டிகளில் கார்ல்சன், பீட்டர் சிவில்டர், வாசியர் மேக்சிம் வெற்றி பெற்றனர்.

9 சுற்றுகளின் முடிவில், 5.5 புள்ளிகள் மட்டும் பெற்ற ஆனந்த், இரண்டாவது இடத்தை கார்ல்சனுடன் பகிர்ந்து கொண்டார். பிரான்சின் வாசியர் மேக்சிம், 6 புள்ளிகள் பெற்று, கோப்பை வென்றார்.



Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement