Advertisement

ரவி சாஸ்திரிக்கு ரூ.7.5 கோடி

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். பவுலிங் பயிற்சியாளராக ஜாகிர் கான், பேட்டிங் ஆலோசகராக டிராவிட் தேர்வாகினர். ஆனால், பவுலிங் பயிற்சியாளராக பரத் அருணை நியமிக்க வேண்டுமென ரவி சாஸ்திரி வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே, ரவி சாஸ்திரிக்கு வழங்கப்பட உள்ள சம்பள் குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' ரவி சாஸ்திரிக்கு ஆண்டுக்கு ரூ. 7 முதல் 7.5 கோடி வரை சம்பளம் தரப்படலாம். கடந்த முறை இந்திய அணி இயக்குனராக இருந்தபோதும், இவர் இதே தொகை தான் பெற்றார். பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 2 கோடி தரப்படும். அதே நேரம், ஜாகிர் எத்தனை நாட்கள் இந்திய அணியுடன் இருப்பார் என்பதை சரியாக தெரிவிக்கவில்லை. இதற்கு ஏற்ப இவருக்கு சம்பளம் தரப்படலாம்,'' என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • NPOOMALAI - Al ain,ஐக்கிய அரபு நாடுகள்


    அனைத்து வகையான வசதிகள் கொடுத்து ( விமானம் டிக்கெட், தங்கும் வசதி, உணவு, கார் வசதி, etc..) அதனுடன், 750 லக்ஷம் ஒரு வருடத்துக்கு குடுக்கிறார்கள், இந்த நிலமியில் இந்தியா இருந்த, இதர ஸ்போர்ட்ஸ் எப்படி போகிஸ் பண்ணுவாங்க....

  • sam - doha,கத்தார்


    கிரிக்கெட் அணியின் அரசியலை வளர்க்க ஏழரை கோடி அதிகம் தான். இந்த ஆள் ஒன்றும் அணியை மேம்படுத்த போவதில்லை. அதை உணரும் காலம் வெகு தூரம் இல்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement