Advertisement

வெள்ளித்திரையில் முத்திரை

'தங்கல்' படத்தின் வெற்றிக்கு பின், சுமார் 10க்கும் மேற்பட்ட விளையாட்டு சார்ந்த சினிமா படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

பொதுவாக இந்தி சினிமாவில் விளையாட்டு நட்சத்திரங்கள் சார்ந்த சினிமா படங்கள் வெ ளியாவது குறைவு தான். பறக்கும் சீக்கியர் மில்கா சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் குறித்து வெ ளியான சினிமாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வரிசையில் தோனியின் 'சொல்ல மறந்த கதை' இணைந்தது. அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் கீதா போகத், பபிதா போகத் வாழ்க்கை குறித்த 'தங்கல்' படத்தில் அமீர் கான் நடித்தது, உலகளவில் பெரும் வரவேற்பு பெற்றது.

இதையடுத்து 'பாலிவுட்' (இந்தி) உலகம் விழித்துக் கொண்டது. சமீபகாலமாக பல்வேறு விளையாட்டு நட்சத்திரங்கள் குறித்து சினிமா எடுக்கப்பட்டு வருகிறது. இதன் எண்ணிக்கை டஜன் கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

செய்னாவாக ஸ்ரதா:

ஸ்ரதா கபூர் நடிக்க செய்னா நேவல் படம், சோனு சூட் தயாரிப்பில் சிந்துவின் படம், இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் சந்தீப் சிங் (நடிகர் தில்ஜித் தோசான்ஜி) என, ஒரே நேரத்தில் பல சினிமா தயாரிக்கப்பட்டு வருகின்றன.

1983ல் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றது குறித்தும் சினிமா எடுக்கும் திட்டம் உள்ளது.

முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன், ஒரு படத்தில் கபடி வீரராக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். பாட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த் குறித்து தெலுங்கில் படம் தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து சினிமா தயாரிப்பாளர் அலி அப்பாஸ் ஜாபர் கூறுகையில்,'' காதல் போல விளையாட்டு என்பது உலகளவில் உணர்ச்சிபூர்வமானது. அரசியல் விருப்பம், வெறுப்புகள் இல்லாமல் இதற்கும் மேலானது. இதனால் இதை எல்லோரும் விரும்புகின்றனர்,'' என்றார்.



Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement